மஹிந்த மீண்டும் வந்தால் சீரழிவுதான் என எச்சரிக்கிறார் சந்திரிக்கா

மஹிந்த மீண்டும் வந்தால் சீரழிவுதான் என எச்சரிக்கிறார் சந்திரிக்கா

மஹிந்த மீண்டும் வந்தால் சீரழிவுதான் என எச்சரிக்கிறார் சந்திரிக்கா

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 9:38 am

மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ​தெரிவித்தார்.

அகலவத்தையில் நேற்று (07) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஸ நாட்டை சீரழித்ததன் பின்னர், ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் நாட்டை மாற்றியமைக்க முடிந்ததாகவும் கட்சியில் ஒரு பகுதியை உடைத்துக்கொண்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ தேர்தலுக்கு வந்துள்ளார் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ​குறிப்பிட்டார்.

மேலும், மஹிந்த ராஜபக்ஸவின் இத்தகைய முயற்சியை தோல்வியடையச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்