ப்ளூமெண்டல் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர்கள் வந்த வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது

ப்ளூமெண்டல் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர்கள் வந்த வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது

ப்ளூமெண்டல் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர்கள் வந்த வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 3:15 pm

கொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் வருகை தந்த வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

KX 31 49 இலக்கத்தைக் கொண்ட கறுப்பு நிறத்திலான ஹைப்ரிட் ரக வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விதான கமகே அமில என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்
குறிப்பிட்டனர்.

உடற்பயிற்சி நிலையத்தின் ஆலோசகராக கடமையாற்றும் குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலிருந்து வெளியான தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பிரதான சந்தேகநபர் மற்றும் ஆயுதங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பாதாள உலகக்குழு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான தகவல்களை சேகரித்து அவர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்