சூனியக்காரிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு இந்தியாவில் 5 பெண்கள் அடித்துக் கொலை

சூனியக்காரிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு இந்தியாவில் 5 பெண்கள் அடித்துக் கொலை

சூனியக்காரிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு இந்தியாவில் 5 பெண்கள் அடித்துக் கொலை

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 5:39 pm

இந்தியாவில் ஐந்து பெண்கள் மாய மந்திர வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்திலேயே இந்த கொடூர சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தலைநகர் ராஞ்சியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள மந்தர் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இரவில் தங்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இந்தப் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்களை விட்டுவிடும்படி கோரியும், கற்களாலும் இரும்புக் கம்பிகளாலும் அந்தப் பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

2000 ஆவது ஆண்டிலிருந்து 2012 வரை கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் சூனியக்காரிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் என அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்