சிந்தியுங்கள் விழிப்புணர்வுத் திட்டம் இன்று மட்டக்களப்பு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டையில்

சிந்தியுங்கள் விழிப்புணர்வுத் திட்டம் இன்று மட்டக்களப்பு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டையில்

சிந்தியுங்கள் விழிப்புணர்வுத் திட்டம் இன்று மட்டக்களப்பு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டையில்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 9:52 am

தகுதியானவர்களைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பில் மக்களைத் தெளிவூட்டும் ‘சிந்தியுங்கள்’ திட்டம் மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

நியூஸ்பெஸ்ட், சக்தி, சிரச மற்றும் கெஃபே அமைப்பு ஆகியன இணைந்து இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

பாராளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும்போது, வாக்காளர்களின் கடமைகள் மற்றும் நிராகரிக்கப்படாத வகையில் எவ்வாறு வாக்கினை அளிப்பது என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டப்படுகிறது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்