கிழக்கு மாகாணத்தில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு தேசிய விழிப்புணர்வுத் திட்டம்

கிழக்கு மாகாணத்தில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு தேசிய விழிப்புணர்வுத் திட்டம்

கிழக்கு மாகாணத்தில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு தேசிய விழிப்புணர்வுத் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 10:10 am

போதைப்பொருள் நாட்டிற்கும் வீட்டிற்கும் உங்களுக்கும் வேண்டாம் எனும் தொனிப்பொருளில் நியூஸ்பெஸ்ட், சக்தி, சிரச மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இணைந்து முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய விழிப்புணர்வுத் திட்டத்தின் ஏழாம் கட்டம் கிழக்கு மாகாணத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இடம்பெறும் ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர் வீடுவீடாகச் சென்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்படும்.

போதைப்பொருள் பாவனையால் மனித உடலுக்கு ஏற்படுகின்ற தீங்குகள் தொடர்பிலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து சமூகமயப்படுத்தல் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்