காபுலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

காபுலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

காபுலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 3:51 pm

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானின் பொலிஸ் பயிற்சியக வளாகத்தினுள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தற்கொலை குண்டுதாரி இரவு 8 மணியளவில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

பொலிஸ் சீருடையில் பொலிஸ் வளாகத்தினுள் வருகை தந்த தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளார்.

வார இறுதி நாள் என்பதால் விடுமுறை நிமித்தம் புறப்படத் தயாராக இருந்த பொலிஸாரே அதிகம் தாக்குதலில் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் நண்பகல் 1 மணியளவில் மத்திய காபூலில் நடத்தப்பட்ட ட்ரக் குண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

10 மணியளவில் காபுல் விமான நிலையத்திற்கு அருகாமையில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தலிபான் ஆயுததாரிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்