கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளம்: குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானம்

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளம்: குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானம்

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளம்: குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 1:30 pm

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

16 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கான கடவுச் சீட்டில் விரல் அடையாளம் பதிவுசெய்யப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டார்.

16 வயதுக்குக் குறைந்தவர்களுக்கான கடவுச்சீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்பட மாட்டாது.

இதன்பொருட்டு, கொழும்பு பிரதான அலுவலகம் உட்பட மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய அலுவலகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கின்றவர்கள் தமது விரல் அடையாளத்தை வழங்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

விரல் அடையாளங்கள் கணனி மயமாக்கப்பட்டு கடவுச்சீட்டுகளில் அடையாளத்தின் பொருட்டு உள்ளடக்கப்படுவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்