ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கையில் பணிகளை ஆரம்பித்தனர்

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கையில் பணிகளை ஆரம்பித்தனர்

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கையில் பணிகளை ஆரம்பித்தனர்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 11:35 am

ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்கள் இலங்கையில் தமது தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

பெப்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் 14 கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இலங்கையின் தேர்தல் முறைமை குறித்து தெளிவுபெற்றதன் பின்னர் அவர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

தெற்காசிய மற்றும் கிழக்கு ஆசிய வலயங்களை சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குழுவில் பங்குபற்றியுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் தினத்திலும், தேர்தலின் பின்னரான காலப்பகுதியிலும் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன் பின்னர் தேர்தல் தொடர்பில் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு சார்பாக சுயாதீன அறிக்கையொன்றை அவர்கள் சமர்பிப்பார்கள் என்றும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்