வேட்பாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அச்சிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல்

வேட்பாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அச்சிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல்

வேட்பாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அச்சிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 1:47 pm

அனுராதபுரம் மாவட்ட வேட்பாளர் ஒருவருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அச்சிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டி.பி.ஜீ. குமாரசிறி குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் தபால்மூலம் விநியோகிக்கப்படுவதற்கு தயார் நிலையில் இருந்ததாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து அனுராதபுரம் மாவட்ட முறைப்பாடு மற்றும் நடவடிக்கை அலுவலகம் ஊடாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டி.பி.ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்