ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானச் சிதைவுகள் MH370 விமானத்தினுடையது என உறுதி

ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானச் சிதைவுகள் MH370 விமானத்தினுடையது என உறுதி

ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானச் சிதைவுகள் MH370 விமானத்தினுடையது என உறுதி

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2015 | 1:26 pm

ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் மலேசிய விமானமான MH370 உடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி விமானம் ஒன்றின் பாகங்கள் ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து அந்த பாகங்கள் MH370 இன் பாகங்களாக இருக்கலாமா என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து விமானத்தின் பாகங்கள் பிரான்ஸிற்கு மேலதிக ஆய்வுகளுக்காக கொண்டு செல்லப்பட்டிருந்தன.

ஆய்வுகளின் முடிவில் கண்டெடுக்கப்ட்ட விமானத்தின் பாகம் மலேசிய விமானத்தினுடையது என நிபுணர்கள் உறுதி செய்துள்ளதாக மலேசிய பிரதமர் ரஜிப் ரசாக் தெரிவித்தஞுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்