கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
காத்தான்குடியில் உதவி தேர்தல்கள் ஆணையாளரை தாக்க முயற்சித்த முன்னாள் நகர சபை ஆணையாளர் கைது

காத்தான்குடியில் உதவி தேர்தல்கள் ஆணையாளரை தாக்க முயற்சித்த முன்னாள் நகர சபை ஆணையாளர் கைது

காத்தான்குடியில் உதவி தேர்தல்கள் ஆணையாளரை தாக்க முயற்சித்த முன்னாள் நகர சபை ஆணையாளர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2015 | 12:34 pm

காத்தான்குடியில் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரை தாக்க முயற்சித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் நகர சபை ஆணையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

தாக்குதல் முயற்சி மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் கிழக்கு மாகாண சயைின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட சம்பவம் குறித்து சுற்றிவளைப்புக்கு சென்ற போதே உதவி தேர்தல்கள் ஆணையாளரின் கடமைக்கு சந்தேகநபர்கள் இடையூறு விளைவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்