மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் – மஹிந்த தேசப்பிரிய

மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் – மஹிந்த தேசப்பிரிய

மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் – மஹிந்த தேசப்பிரிய

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 6:07 pm

அனைத்து வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று விஷேட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடத்தப்பட உள்ளதுடன் அதற்கான பிரசார நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று ஆரம்பமான உயர் தர பரீட்சை மற்றும் ஆகஸ்ட் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாதவாறு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசியல்வாதிகளிடமும் ஆதரவாளர்களிடமும் கேட்டு கொள்வதாக இதன் போது தேர்தல்கள் ஆணையானர் தெரிவித்துள்ளார்.

கூட்டங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளின் போது ஒலி பெருக்கிகளின் சத்தத்தை குறைக்குமாறு தென் போது மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்