பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியம் மேனகா

பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியம் மேனகா

பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியம் மேனகா

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 7:53 pm

நாட்டுக்கு முகவரி கொடுத்த மலையக மக்களின் அடையாளத்தினை வலுப்படுத்துவதற்காகவும், பாராளுமன்றத்தின் பெண்களின் பிரநிதித்துவத்திற்காகவும் பிரஜைகள் முன்னணியில் பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதற்கு சான்று பகரும் வண்ணம் சுப்பிரமணியம் மேனகா பிரஜைகள் முன்னனணி சார்பாக நுவரெலியாவில் போட்டியிடுகின்றார்.

நுவரெலியா – ஒலிபன்ட் தோட்டத்தில் பிறந்த இவர் அம்பேவல எல்பியன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான மேனகா மலையக மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதற்காக பிரஜைகள் முன்னணி மூலமாக அரசியலில் தடம்பதித்துள்ளார்.

இவரின் அரசியல் பிரவேசம் மலைய மக்களை ஒரு கணம் திரும்பிப்ப பார்க்க வைத்துள்ளது.
மகளிர் மன்றத்தின் தலைவியாக மக்களுக்கு பணியாற்றிய இவர் தொடர்ந்தும் மக்களின் நலனுக்காக உழைப்பதற்காக அரசியலில் பிரவேசித்துள்ளார்.

நாள்தோறும் தேயிலைத் தோட்டத்தில் வியர்வை சிந்தி வேலைசெய்து வரும் மலையக மக்களின் வாழ்வியல் தொடர்பில் நன்கறிந்த மேனகா பிரஜைகள் முன்னணியில் இருந்து மலையக மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்