மக்களின் பாரிய வரவேற்புடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரஜைகள் முன்னணி

மக்களின் பாரிய வரவேற்புடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரஜைகள் முன்னணி

மக்களின் பாரிய வரவேற்புடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரஜைகள் முன்னணி

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 8:03 pm

பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று லிந்துலை அக்கரகந்த பகுதியில் நடைபெற்றது.

பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஶ்ரீரங்காவும் இதில் கலந்து கொண்டிருந்தார்.

லிந்துலை அக்கரகந்த பகுதியில் நடைபெற்ற பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜே.ஶ்ரீரங்காவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததுடன், 100 வீதம் பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ள பிரஜைகள் முன்னணியின் தீர்மானத்திற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இதேவேளை, பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன.

லிந்துலை, அக்கரபத்தனை, டயகம உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற பிரஜைகள் முன்னணிக்கு மக்களின் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்