நிரோஷன் சம்பத்தின் பூதவுடல் நேற்று இரவு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது

நிரோஷன் சம்பத்தின் பூதவுடல் நேற்று இரவு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது

நிரோஷன் சம்பத்தின் பூதவுடல் நேற்று இரவு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 7:26 pm

கொட்டாஞ்சேனை – புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நிரோஷன் சம்பத் என்பவரின் பூதவுடல் நேற்று (03) இரவு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுப்பட்ட அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது கடந்த
31 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண்னொருவரும் உயிரிழந்தார்.

கிரேன்பாஸ் – ஸ்டேஸ்புர பகுதியில் வசித்த 36 வயதான நிரோஷன் சம்பத்தின் வீட்டில் நேற்றிரவு பெரும் திரளான மக்கள் குழுமியிருந்தனர்.

போதிய வசதிகள் இன்மையால் நிரோஷனனின் பூதவுடல் கயிற்றில் கட்டி அவரது வீட்டிற்குள் இழுத்து எடுக்கப்பட்டது.

பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெரும் தொகையான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றிரவு இறுதியஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தார்.

நாளை மறுதினம் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்