தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரச வளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரச வளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரச வளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 5:01 pm

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் அரச வளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அவ்வாறான சம்பங்கள் குறித்து 106 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவற்றில் 20 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோத நியமனங்கள் குறித்து 166 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அரச அலுவலகங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றமை தொடர்பில் 06 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்