சுப்பர் ஸ்டார்  படத்தில் வித்தியாசமான  கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகா ஆப்தே

சுப்பர் ஸ்டார் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகா ஆப்தே

சுப்பர் ஸ்டார் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகா ஆப்தே

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 3:23 pm

ரஞ்சித்தின் படம் இந்த மாதம் ஆரம்பிக்கிறது. ரஜினி தவிர்த்து பிரகாஷ்ராஜ், கலையரசன், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சி பட்டறையும் நடத்தப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் ராதிகா ஆப்தேயே இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.

ரஜினிகாந்தைவிட பெரிய ஸ்டார் யாருமில்லை. அவரை சந்திக்க மிக ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு படத்தில் வித்தியாசமான, வலுவான நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரம் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்