“சிந்தியுங்கள்” செயற்றிட்டத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று

“சிந்தியுங்கள்” செயற்றிட்டத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று

“சிந்தியுங்கள்” செயற்றிட்டத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 8:20 am

சக்தி – சிரச – நியூஸ்பெஸ்ட் மற்றும் கெஃபே அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ள நாடளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மக்களின் வாக்குரிமையை சரியான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்காக பயன்படுத்துவதன் அவசியம் மற்றும் வாக்கின் பெறுமதி தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் போது வாக்குரிமையை தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கு பயன்படுத்துவதன் அவசியம் தொடர்பில் தெளிவூட்டும் சிந்தியுங்கள் திட்டத்தின் ஒரு கட்டம் எம்பிலிபிட்டிய மற்றும் வாரியபொல ஆகிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நியூஸ்பெஸ்ட் – சக்தி – சிரச மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் மக்களை தெளிவூட்டி அவர்களிடம் இருந்து கையொப்பங்களை சேகரித்து வருகின்றனர்.

மக்களின் இறையாண்மை தொடர்பில் மக்களை தெளிவூட்டும் சிந்தியுங்கள் திட்டத்தின் மற்றுமொரு கட்டம் வாரியபொலவில் இன்று காலை ஆரம்பமானது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்