கல்முனையில் சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது கைதான இருவர் பிணையில் விடுவிப்பு

கல்முனையில் சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது கைதான இருவர் பிணையில் விடுவிப்பு

கல்முனையில் சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது கைதான இருவர் பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 4:23 pm

கல்முனை நகரில் சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது கைதான இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து தலா 10,000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கல்முனை நகரில் சட்டவிரோதமாக தேர்தல் பிரசார துண்டுபிரசுரங்களை விநியோகித்த போது சந்தேகநபர்கள் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவரே கல்முனை நகரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்