ஔடத சட்ட மூலத்தை தயாரிக்கும் போது ஏற்பட்ட இடையூறுகள் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

ஔடத சட்ட மூலத்தை தயாரிக்கும் போது ஏற்பட்ட இடையூறுகள் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

ஔடத சட்ட மூலத்தை தயாரிக்கும் போது ஏற்பட்ட இடையூறுகள் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 1:08 pm

ஔடத சட்ட மூலத்தை தயாரிக்கும் போது ஏற்பட்ட இடையூறுகள் குறித்து நேற்று கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.

தேசமான்ய போராசிரியர் நன்ததாஸ கோதாகொட அவர்களின் 18 நினைவு தின நிகழ்வில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது .

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு விசேட பதக்கம் ஒன்றும் வழங்கப்பட்டது .

இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாவது :

[quote]ஔடத சட்டத்தை தயாரித்து அமைச்சரவைக்கு சமர்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அது காணாமல் போனமை எனக்கு நினைவுக்கு வருகின்றது . அது காணாமல் போனதன் பின்னர் அதனை புதிதாக மீண்டும் தயார் செய்து ஒரு வருட காலத்தின் பின்னர் இரண்டாவது தடவையாக சமர்பித்தேன். முன்னைய முறை சமர்பித்த சட்ட மூலத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் நான் பின்னர் அறிந்து கொண்டேன். புகையிலை சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற எச்சரிக்கையை சுகாதார அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவையில் சமர்ப்பித்து அதனை வர்த்தமானியில் அறிவித்தல் விடுக்க நடவடிக்கை எடுத்தேன். புகைத்தல் தடை செய்யப்படவில்லை புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதில் எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இதனை நிராகரித்து இருப்பினும் பாராளுமனறத்திற்கு இதனை கொண்டு வந்து நிறைவேற்றினோம். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்