ஐ.தே.க வின் தேர்தல் விஞ்ஞாபனம் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கரிடம் கையளிக்கப்பட்டது

ஐ.தே.க வின் தேர்தல் விஞ்ஞாபனம் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கரிடம் கையளிக்கப்பட்டது

ஐ.தே.க வின் தேர்தல் விஞ்ஞாபனம் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கரிடம் கையளிக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2015 | 7:36 pm

ஐக்கிய தேசிய கட்சியின்  தேர்தல் விஞ்ஞாபனம்  இன்று மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல  தேரரிடம் கையளிக்கப்பட்டது.

தேர்தல் விஞ்ஞாபனத்தை மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடம் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கையளித்தார்.

இதனைத் தொடர்ந்து மஹாநாயக்க தேரர் மற்றும் கிரியெல்ல ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இதன் போது கிரியெல்ல முன்னைய அரசாங்கத்தின் அனைத்து வகையான அபிவிருத்திப் பணிகளும் தெற்கிலேயே மேற்கொள்ளப்பட்டது என குற்றஞ்சாட்டினார்.

மேலும் மஹாநாயக்க தேரர் சுதந்திரக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்