முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் வசந்த பெரேரா கைது

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் வசந்த பெரேரா கைது

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் வசந்த பெரேரா கைது

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 11:45 am

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் வசந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி மாத்தளை நகரில் அரசியல்கட்சி ஆதரவாளர் ஒருவரைக் கடத்தி தாக்குதல் நடத்தியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீது மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் வசந்த பெரேரா தேடப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று காலை மாத்தளை பொலிஸாரிடம் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிடுகின்றார்.

இதனையடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்