பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டங்கள் நேற்றைய தினம் நுவரெலியாவில் இடம்பெற்றன

பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டங்கள் நேற்றைய தினம் நுவரெலியாவில் இடம்பெற்றன

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 8:08 pm

பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டங்கள் நேற்று நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பகுதிகளில் இடம்பெற்றன.

நோர்வூட் – சென்மதுரை பகுதியில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அதிகளவிலான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜெ.ஶ்ரீரங்காவும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

எதிர்வரும் பொதுத் ​தேர்தலில் பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த கூட்டம் இடம்பெற்றது.

இதேவேளை, பிரஜைகள் முன்னணியின் மற்றுமொரு தேர்தல் பிரசார கூட்டம் தலவாகலை லிபகல பகுதியில் நடைபெற்றது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெ.ஶ்ரீரங்காவும் கலந்துகொண்டிருந்தார்.

இதேவேளை, பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்ைககள் இன்றும் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டன.

லிந்துலை, அக்கரபத்தனை, டயகம உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற பிரஜைகள் முன்னணிக்கு மக்களின் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்