பாகிஸ்தானுடனான டி20 தோல்வியைத் தொடர்ந்தும் தரவரிசையில் இலங்கை அணி முதலிடத்தில்

பாகிஸ்தானுடனான டி20 தோல்வியைத் தொடர்ந்தும் தரவரிசையில் இலங்கை அணி முதலிடத்தில்

பாகிஸ்தானுடனான டி20 தோல்வியைத் தொடர்ந்தும் தரவரிசையில் இலங்கை அணி முதலிடத்தில்

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 5:00 pm

20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வெளியிட்டுள்ளது.

நடப்பு உலக சம்பியனான இலங்கை அணியுடனான இரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை பின்னுக்குத்தள்ளி 3 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியால் 4 புள்ளிகளை இழந்தாலும் 126 புள்ளிகளுடன் இலங்கை தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

122 புள்ளிகளுடன் ஆஸி. 2 ஆவது இடத்திலும், 120 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3 ஆவது இடத்திலும், 118 புள்ளிகளுடன் இந்தியா 4 ஆவது இடத்திலும் உள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள், தென்ஆபிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்