நாளை ஆரம்பமாகவுள்ள க.பொ.த  உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

நாளை ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

நாளை ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 11:20 am

நாளை ஆரம்பமாகவுள்ள க.பொ.த  உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இம்முறை பரீட்சையில் 3,09,069 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறுகின்றார்.

இவர்களுள் 2,36,072 பாடசாலை பரீட்சாத்திகளும், 72,997 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகளில் 22,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவிக்கின்றார்.

நாடளாவிய ரீதியில் 2,180 பரீட்சை நிலையங்களும் 303 தொடர்பாடல் நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறப்பிடுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்