தேர்தல் வெற்றியுடன் ஹம்பந்தோட்டை மாவட்டத்தின் அனைத்து குடும்பங்களின் பொறுப்பை நான் ஏற்பேன் – சஜித்

தேர்தல் வெற்றியுடன் ஹம்பந்தோட்டை மாவட்டத்தின் அனைத்து குடும்பங்களின் பொறுப்பை நான் ஏற்பேன் – சஜித்

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 7:20 pm

ஐக்கிய தேசிய கட்சியின் ஹம்பந்தொட்டை மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச வீரகெட்டியவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வீரகெட்டிய – மொரயாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஹேமா பிரேமதாசவும் கலந்து கொண்டார்.

இதன் போது சஜித் பிரேமதாச தெரிவித்ததாவது :

[quote]தான் அதிகாரத்திற்கு வந்தால் அது தருவேன் இது தருவேன் என ஒவ்வொரு மேடைகளிலும் கூறி திரிகின்றனர். இவற்றை நீங்கள் ஏற்க வேண்டாம். இந்த தேர்தல் வெற்றியுடன் ஹம்பந்தோட்டை மாவட்டத்தின் 1,79,000 குடும்பங்களின் பொறுப்பையும் நான் ஏற்பேன் என கூறுகின்றேன். ரணில் விக்ரமசிங்கவின் காலத்திற்கு பின்னர் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் நாட்டின் தலைமைத்துவத்தை நிச்சையமாக மொரயாயவிற்கு கொண்டு வருவேன்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்