தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் தேசிய இணக்கப்பாடு மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிப்பு

தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் தேசிய இணக்கப்பாடு மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிப்பு

தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் தேசிய இணக்கப்பாடு மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 7:12 pm

தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தயாரித்துள்ள தேசிய இணக்கப்பாடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

கொழும்பு விஹாரமாதேவி வெளியரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

5 பிரதான விடயங்களின் அடிப்படையில் இந்த இணக்கப்பாடு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் பல அமைப்புகளின் கையொப்பத்துடன் மஹிந்த ராஹபக்ஸவிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாவது :

[quote]வெளிநாட்டு டொலர்களுக்காக செயற்படுகின்ற அமைப்புகள் ஒன்றிணைந்து எம்மை தோல்வியடைய செய்ய முற்படுகின்ற போது , நாட்டை நேசிக்கும் மக்கள் எமக்காக ஒன்றிணைகின்றமையை பாரிய சக்தியாகவே நாம் கருதுகின்றோம். எமக்கிருந்த அச்சத்தை நீங்கள் நீக்கியுள்ளீர்கள். நாட்டின் ஐக்கியத்திற்காக செயற்படும் பொறுப்பை நாங்கள் ஏற்று கொள்கின்றோம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்