சங்கக்காரவின் சதத்தினால் சர்ரே அணி வெற்றி

சங்கக்காரவின் சதத்தினால் சர்ரே அணி வெற்றி

சங்கக்காரவின் சதத்தினால் சர்ரே அணி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 12:32 pm

நேற்றைய தினம் இடம்பெற்ற சர்ரே மற்றும் டேர்பிஷேர் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ரோயல் லண்டன் கிண்ணத்திற்கான ஒருநாள் போட்டியில் சர்ரே அணி 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய சர்ரே அணி சங்கா மற்றும் டேவிஸ் இன் சதங்களின் உதவியுடன் 326 ஓட்டங்களை குவித்தது. இதில் சங்கக்கார 104 பந்துகளில் 109 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 13 நான்கு ஓட்டங்களும் 3 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கும்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டேர்பிஷேர் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

சங்கக்கார 98 பந்துகளில் சதத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்