எஹெலியகொட, குளியாபிடிய விபத்துக்களில் அறுவர் பலி

எஹெலியகொட, குளியாபிடிய விபத்துக்களில் அறுவர் பலி

எஹெலியகொட, குளியாபிடிய விபத்துக்களில் அறுவர் பலி

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 8:53 am

எஹெலியகொட மற்றும் குளியாபிடிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

எஹெலியகொட – உடமல்வத்த பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

செவனகலவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் இரத்தினபுரி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த நிலையில் முச்சக்கரண வண்டியில் பயணித்த 6 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் மூன்று ஆண்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று மாலை இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்