உலகளாவிய ரீதியில் சக்தி தொலைக்காட்சி

உலகளாவிய ரீதியில் சக்தி தொலைக்காட்சி

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2015 | 10:59 am

இலங்கை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஜாம்பவானாக திகழும் சக்தி ரி.வீ இன்று (31) மற்றுமொறு புதிய அத்தியாயத்தில் தடம் பதித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக இன்றைய தினம் சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி அலைவரிசைகளை உலகளாவிய ரீதியில் Yupp TV – [email protected] மற்றும் Lebara – [email protected] மூலம் கண்டுகளிக்கக்கூடிய வசதி நேயர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

க்ளோபல் சக்தியின் அங்குரார்ப்பண நிகழ்வு தெபானம கலையகத்தில் இன்று (31) காலை நடைபெற்றது.

இதன் போது சர்வமத அனுஷ்டானங்களும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் போது சக்தி தொலைக்காட்சி அலைவரிசை பிரதானி ஜி.கே. சந்தோஷ் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.

அங்குரார்ப்பண நிகழ்வை அடுத்து புதுப்பொலிவுடன் குட்மோர்னிங் ஸ்ரீலங்கா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின.

உலக வாழ் தமிழ் மக்கள் இன்று முதல் க்ளோபல் சக்தியின் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள 40 இலட்சத்திற்கும் அதிக இலங்கையர்களின் படைப்புக்களையும் க்ளோபல் சக்தியூடாக ஔிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தினை ஆரம்பிக்கும் நோக்கில் சக்தி தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் தொலைக்காட்சி துறைக்கு பாரிய பங்களிப்பினை வழங்கிய சக்தி ரி.வீ இலங்கையின் முன்னிலை தமிழ் தொலைகாட்சி அலைவரிசையாக வீறு நடைபோடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இசைத்துறையில் எம்மவரின் சாதனையை பறைசாற்றும் வகையில் ”குளோபல் சுப்பர் ஸ்டார் ‘ முதல் சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார் மற்றும் சக்தி சுப்பர் ஸ்டார் ஆகிய நிகழ்ச்சிகளையும் சக்தி ரி.வி பெருமையுடன் நடத்தி வெற்றி கண்டுள்ளது.

இரசிகர்களின் இதயங்களை வென்ற சக்தி ரீ.வீ தடைக்கற்களை தகர்த்து வெற்றிநடை போட நியூஸ்பெஸ்ட்டின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உலகளாவிய ரீதியில் சக்தி தொலைக்காட்சி

Posted by Newsfirst.lk tamil on Friday, July 31, 2015

IMG_9500

IMG_9532

IMG_9503

IMG_9550

IMG_9562

IMG_9554


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்