பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுப்பு

பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 8:34 pm

பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தலவாக்கலை – சென் கூம் பகுதியிலும் பிரஜைகள் முன்னணிக்கு மக்களின் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 100 வீதம் பெண்களுக்கு வாய்ப்பளித்து பிரஜைகள் முன்னணி இம்முறை வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

மலையகத்தில் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் மக்களுக்கு தமது பிரச்சினைகளை தாமே பாராளுமன்றம் சென்று தீர்த்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அடுத்த மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரஜைகள் முன்னணியின் ஆதரவாளர்கள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை மலையகத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக மலையக மக்கள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்