நிறைவுகாண் மற்றும் மேலதிக வைத்திய சேவை உத்தியோகத்தர்களின் அடையாள பணிபகிஸ்கரிப்பு நிறைவு

நிறைவுகாண் மற்றும் மேலதிக வைத்திய சேவை உத்தியோகத்தர்களின் அடையாள பணிபகிஸ்கரிப்பு நிறைவு

நிறைவுகாண் மற்றும் மேலதிக வைத்திய சேவை உத்தியோகத்தர்களின் அடையாள பணிபகிஸ்கரிப்பு நிறைவு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 8:40 am

நிறைவுகாண் மற்றும் மேலதிக வைத்திய சேவை உத்தியோகத்தர்கள் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆரம்பித்த அடையாள பணிபகிஸ்கரிப்பை இன்று காலை 8 மணியுடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது .

சுகாதார அமைச்சின் செயலாளருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையடலில் தமது கோரிக்​கைகளை பூர்த்தி செய்வதற்கு சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியதை அடுத்து பணிபகிஸ்கரிப்பை தாம் கைவிடுவதாக நிறைவு காண் மற்றும் மேலதிக வைத்திய சேவையாளர்கள் ஒன்றியத்தின் பிரதம செயலாளர் சமன் ஜயசேகர தெரிவித்துள்ளார் .

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிறைவுகாண் வைத்தியர்கள்ஆய்வு கூட உத்தியோகத்தர்கள் தாதியர்கள் உள்ளிட்ட 14 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டது .

எனினும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்ட இந்த பணி பகிஸ்கரிப்பு இன்று காலை 8 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்