ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்களை கடத்திய சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது

ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்களை கடத்திய சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது

ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்களை கடத்திய சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 3:42 pm

மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு ஆதரவாளர்களை கடத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆறு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (30) அதிகாலை முச்சக்கரவண்டியொன்றில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது குறித்த இருவரும் கடத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட இடத்திற்கு கெப் வாகனத்தில் சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆறு ஆதரவாளர்கள் இவர்களை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடத்தல் சம்பவம் இடம்பெற்றவேளை தப்பிச் சென்ற ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய கெப் வாகனத்துடன் ஆறு சந்தேகபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்