ஆயுதமுனையில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்கள் கடத்தல்; சந்தேகநபர்கள் கைது

ஆயுதமுனையில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்கள் கடத்தல்; சந்தேகநபர்கள் கைது

ஆயுதமுனையில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்கள் கடத்தல்; சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2015 | 9:05 am

சீதுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்களை அடையாளம் தெரியாதோர் கடத்தி சென்றுள்ளனர் .

கடமைகளின் நிமித்தம் பொலிஸ் குழு ஒன்று வெளி இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை சோதனைக்குட்படுத்த முயற்சித்திருந்தனர்.

இந்த வேளை காருக்குள் இருந்தவர்கள் துப்பாக்கி முனையில் பொலிஸாரை அச்சுறுத்தி மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி சென்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிடுகின்றார் .

இதேவேளை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்