ரிஷாட் பதியூதீனின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளுடன் கைதான நபர் சரீரப் பிணையில் விடுதலை

ரிஷாட் பதியூதீனின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளுடன் கைதான நபர் சரீரப் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2015 | 7:16 pm

புத்தளம் வண்ணாத்திவில்லு 6ஆம் கட்டை பகுதியில் சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகளைக் கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து பிணை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – மன்னார் வீதியில் 6ஆம் கட்டை பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் சுவரொட்டிகளுடன் நேற்றிரவு 11.30 க்கு சந்தேகபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரிஷாட் பதியூதீனின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளே சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

தேர்தல் பிரசார சுவரொட்டிகளைக் கொண்டு சென்ற வேன் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்