காணாமற்போன உறவுகளுக்காக நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் மக்கள் பிரார்த்தனை

காணாமற்போன உறவுகளுக்காக நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் மக்கள் பிரார்த்தனை

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2015 | 9:35 pm

காணாமற்போன தமது உறவினர்களுக்காக நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் மக்கள் இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

காணாமற்போன தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரி இன்று காலை நல்லூர் கந்தன் ஆலயத்தின் முன்னால் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இவர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமது பிரச்சினைகளுக்கு மாத்திரம் இது வரையில் தீர்வு கிட்டவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்