2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவது தான் எனது கனவு – ஸ்ரீசாந்த்

2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவது தான் எனது கனவு – ஸ்ரீசாந்த்

2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவது தான் எனது கனவு – ஸ்ரீசாந்த்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 4:05 pm

சூதாட்ட புகாரில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வரும் 2019 உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுவது தான் என் கனவு என தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் விளையாடிய கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் மற்றும் அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீசாந்த் உற்பட 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

இதைதொடர்ந்து ஸ்ரீசாந்த் தனது சொந்த ஊரான கொச்சியில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான தீர்ப்பு தொடர்பாகவும் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பாகவும் பேட்டி அளித்துள்ள அவர் “ 2019 உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடி இந்தியாவிற்கு கிண்ணத்தை பெற்று தருவது தான் என் கனவு. இது நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் என் மீதும் என் திறமை மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன். அந்த நம்பிக்கைதான் என்னை இரண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடிய முதல் கேரள கிரிக்கெட் வீரர் என்ற பெயரை பெற்று தந்ததுள்ளது.

நான் இந்திய கிரிக்கெட் ஒன்றியத்தின் மைதானங்களில் பயிற்சி எடுத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொச்சியில் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடித்தான், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக மாறினேன்.

திரும்பவும் அதே மைதானங்களுக்கு செல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்