மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 12:54 pm

மாலைதீவின் 50 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் தலைநகரில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

மாலைத்தீவு தலை நகரில் அமைந்துள்ள டருபருகே மாநாட்டு மண்டபத்தில் இந்த சுதந்திர தின  நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல்லா கயூம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்றார்.

இதன்போது பல கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஏனைய நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்