மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வேட்பாளர்களின் பிரதிபலிப்புக்கள்

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வேட்பாளர்களின் பிரதிபலிப்புக்கள்

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வேட்பாளர்களின் பிரதிபலிப்புக்கள்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 9:08 pm

முறிகள் கொடுக்கல் வாங்கல் அரசியல் மேடைகளில் பிரதான தலைப்பாகியுள்ளது.

அது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மஹிந்த அமரவீர தெரிவித்ததாவது :

[quote]மத்திய வங்கி ஆளுநரின் மோசடியை நான் தான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கொண்டு சென்றேன். முறைப்பாடு செய்ததன் பின்னர் விசாரணை நடத்தி அதன் தீர்ப்பிற்காக காத்திருக்கின்றேன். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை எந்தளவு என்பதை கணிக்க காத்திருக்கின்றோம். மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தொடர்புப்பட்டுள்ளதாக கோப் குழுவிலும் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தான் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொறுப்புள்ளது. ஜனாதிபதி கூறிய பின்னர் கூட மத்திய வங்கியின் ஆளுநரை அவர் விலக்க வில்லை.[/quote]

மேலும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்ததாவது :

[quote]முறிகள் சம்பவம் என்ன என்பதை நான் தெளிவாக கூறுகின்றேன். அதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவின் மூவரடங்கிய குழு தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள். இதில் பாரிய விடயங்கள் உள்ளன. இதில் மறைக்கப்பட்ட பல விடயங்கள் உள்ளன. ஆகவே அதிகாரம் மிக்க நிறுவனம் ஒன்றை கொண்டு விசாரணை செய்ய வேண்டும். மன்னரை கடித்து இரத்தம் உரிஞ்சும் நுளம்பை
வாளால் வெட்டியது போன்றே சுஜீவ சேனசிங்க செயற்பட்டுள்ளார்.[/quote]

முறிகள் கொடுப்பனவு தொடர்பாக சுஜீவ சேனசிங்கவும் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது :

[quote]நான் சவால் விடுத்தேன். மத்திய வங்கி தொடர்பில் தற்போது கூச்சலிடுகின்றனர். முடிந்தால் ஒருவரேனும் மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பில் விவாதத்திற்கு வாருங்கள் . மஹிந்த ராஜபக்ஸ , சுசில் பிரேமஜயந்த , டியூ குணசேகர , விமல் வீரவன்ச மற்றும் பந்துல யாரென்றாலும் விவாதத்திற்கு வாருங்கள். இது தான் திருட்டு என கூறுங்கள். நான் பதில் தருகின்றேன்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்