பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர்களுக்கு இடையூறு

பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர்களுக்கு இடையூறு

பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர்களுக்கு இடையூறு

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 8:00 pm

நுவரெலியா – வலபனை பகுதியில் பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், அதற்கு சிலர் இடையூறு விளைவித்துள்ளனர்.

பிரஜைகள் முன்னணி சார்பில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்ற காலை 9 மணி முதல் ராகலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் மாலை 4.30 மணியளவில் சிலர் இவர்களுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

வலபனை – மஹஊவ பிரதேசத்திலேயே இவ்வாறு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தம்மை முடக்க வந்தவர்களை தாம் விரட்டி அனுப்பியதாக பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலையகத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக முன் வந்துள்ள பெண்களை எவராலும் ஒடுக்க முடியாது எனவும், இன்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தாம் வெட்கப்படுவதாகவும் வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்