பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகனை சந்தித்தார் பிரதமர் நரேந்திரமோடி

பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகனை சந்தித்தார் பிரதமர் நரேந்திரமோடி

பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகனை சந்தித்தார் பிரதமர் நரேந்திரமோடி

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 12:12 pm

வசூல் சாதனை படைத்துள்ள பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகன் பிரபாஸ் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளிவந்து இரு வாரங்களில் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர் பிரபாஸ்.

இந்நிலையில், பிரபாசை பிரதமர் நரேந்திரமோடி அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் பிரதமர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

‘பாகுபலி’ பிரபாசை சந்தித்தேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளதுடன் படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் தெலுங்கு நடிகரும், பிரபாசின் பெரியப்பாவுமான, கிருஷ்ணம் ராஜுவும் உடனுள்ளார்.

பிரபாசும் தனது டுவிட்டர் கணக்கில் இப்படத்தை பகிர்ந்துள்ளார். நேற்று (26) இந்த சந்திப்பு நடந்துள்ளது. ‘வை திஸ் கொலவெறி’ என்ற பாடல் அகில உலகிலும் பிரபல்யம் ஆனபோது, அந்த பாடல் இடம் பெற்ற ‘3’ திரைப்படத்தின் கதாநாயகன் தனுஷை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அழைத்து விருந்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

modi


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்