நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு 16 பேர் காயம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு 16 பேர் காயம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு 16 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 1:25 pm

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன்,16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு டொரிங்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 16 பாடசாலை மாணவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜீப் வண்டியொன்றும் பஸ் ஒன்றும் மோதி இன்று காலை 6.45 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குருநாகல் கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவா் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றும் கெப் வண்டியும் நேருக்கு நோ் மோதியதில் இன்று (27) அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவா் பலத்த காயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னா் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடா்பில் கெப் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா் .

மேலும் திருகோணமலை உப்புவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொரவெவ பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை வரோதய நகரைச் சோ்ந்த 30 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (27) இடம்பெறவுள்ள அதேவேளை உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்