தேர்தல் அரங்கில் சூடு பிடித்துவரும் வேட்பாளர்களின் கருத்துப் பகிர்வுகள்

தேர்தல் அரங்கில் சூடு பிடித்துவரும் வேட்பாளர்களின் கருத்துப் பகிர்வுகள்

தேர்தல் அரங்கில் சூடு பிடித்துவரும் வேட்பாளர்களின் கருத்துப் பகிர்வுகள்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 8:16 pm

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளிலும் பொதுத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் யாழில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட இரா.சம்பந்தன் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார் :

[quote]பல்வேறு இனங்கள் மற்றும் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்ற நாடுகளில் இருக்கின்ற ஆட்சி முறைகள் சம்பந்தமான ஒழுங்குகளின் அடிப்படையில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு, வடகிழக்கு மற்றும் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசத்தில் போதிய சுயாட்சியை நாங்கள் பெறுவதற்கு உரித்துடையவர்கள். எனினும் ஒருமித்த நாட்டுக்குள் நாட்டுக்கு எவ்விதமான பிளவும் ஏற்படாமல் ஒற்றுமையான நாட்டிற்குள் அதிகாரம் எங்களுக்கு முழுமையாக பகிர்ந்தளிக்கபடவேண்டும். தேசிய பாதுகாப்பு, வெளிவிவகாரம் நாணயம் விதமானவற்றை தவிர்த்து ஏனைய விடங்கள் சம்பந்தமாக அதிகாரம் எங்களுக்கு பகிந்தளிக்கப்படவேண்டும். [/quote]

இதே கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன் பின்வரும் கருத்தை வௌிப்படுத்தினார் :

[quote]தமிழ் மக்கள் வலுவான நிலையில் இருந்தால் தான் எமது கோரிக்கையை இலங்கை அரசாங்கத்துடன் மாத்திரமல்ல உலக நாடுகளுக்கும் சொல்லலாம். எமது குரலை அவர்கள் செவி மடுக்க இந்த தேர்தல் எமக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். [/quote]

மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா கருத்துத் தெரிவித்ததாவது :

[quote]தலைவர் அஷ்ரப் ஒன்றைச் சொன்னார். எவ்வாறு தமிழர் கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலை செய்து செய்து, தமிழ் மக்களை எதிரணியில் வைத்து, தமிழ் மக்கள் சொல்லன்னா துன்பங்களையும் துயரங்களையும், அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ, அந்த துன்பங்களையும் துயரங்களையும் முஸ்லீம் சமூகம் ஒருபோதும் அனுபவிக்கக் கூடாது. ஆகவே யாரை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் சரி, தேர்தல் முடிந்ததும் அந்த அரசாங்கத்துடன் சேர்ந்து, இந்த சமுதாயத்தின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே முஸ்லீம் காங்கிரஸின் தாரகமந்திரமாகும். ஆனால் இன்று ரவூப் ஹக்கீம் அவர்கள் மஹிந்த ராஜபக்ஸவை இரண்டு ஜனாதிபதி தேர்தலிலும் எதிர்த்தார். இரண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்து மறுநாள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார். அமைச்சர் பதவிகளைப் பெறுவார். பிரதியமைச்சர் பதவிகளைப் பெறுவார். ஆகவே இந்த சமூகத்திற்காக இணைந்து கொண்டு செய்த சேவைகள் என்ன?[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்