திருகோணமலை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் எண்ணெய்வள ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை

திருகோணமலை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் எண்ணெய்வள ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை

திருகோணமலை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் எண்ணெய்வள ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 5:09 pm

திருகோணமலை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய்வள ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்