உக்குவா என்பவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

உக்குவா என்பவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

உக்குவா என்பவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 9:08 am

தங்கல்ல நகரில் ஜயவீர படபெதிகே இந்திக எனப்படும் உக்குவா என்பவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது .

அதற்கமைய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்துள்ள நபர் தொடர்பில் மனித கொலை குற்றச்சாட்டு வழக்குகள் இரண்டும், கொலை முயற்சியில் ஈடுபட்டமை குறித்த வழக்கு விசாரணை ஒன்றும், சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையொன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

உக்குவா என்பவர் தனது சகோதரன் உள்ளிட்ட மற்றுமொருவருடன் முச்சக்கர வண்டியில் பயணித்த போது நேற்று (26) முற்பகல் காரில் சென்ற சிலரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்