இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் காலமானார்

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் காலமானார்

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 9:20 pm

இந்தியாவின் அணுவிஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம் காலமானார்.

இன்றையதினம் ஷிலோங் கல்லூரியில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் திடீரென சுகவீனமுற்று மயங்கி விழுந்த அப்துல் கலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவரது இன்னுயிர் பூவுலகை விட்டு நீங்கியது. இறக்கும் போது இவருக்கு வயது 83.

இவர் இந்தியாவின் 11 ஆவது ஜனாதிபதியாக 2002 – 2007 வரை பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1931 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த அப்துல் கலாம் இந்தியாவின் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்