நாற்பது விதமான பழங்கள் காய்க்கும் விசித்திர மரம் (Video)

நாற்பது விதமான பழங்கள் காய்க்கும் விசித்திர மரம் (Video)

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2015 | 11:44 am

அமெரிக்காவில் நியூயோர் அருகே ஒரே மரத்தில் பிளம்ஸ், பீச், செர்ரி உள்ளிட்ட 40 விதமான பழ வகைகள் காய்க்கின்றன. இந்த மெஜிக் மரத்தை விவசாயத்துறை பேராசிரியர் சாம் வன் அகென் என்பவர் உருவாக்கியுள்ளார்.

இவர் சிராகங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். விவசாயத்தில் நாட்டம் உடைய அவர் பிளம்ஸ், செர்ரி உள்ளிட்ட 40 விதமான பழ மரங்களை ஒட்டு முறையில் ஒரே மரமாக உருவாக்கினார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நியூயோரக் மாகாண விவசாய பரிசோதனை பண்ணையில் இதை உருவாக்கினார். தற்போது அவை பூவாகி, காயாகி பழங்களாக பழுத்து குலுங்குகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்