ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் ஒக்டோபர் மாதம் இலங்கை விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் ஒக்டோபர் மாதம் இலங்கை விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் ஒக்டோபர் மாதம் இலங்கை விஜயம்

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2015 | 5:03 pm

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் மீன் உற்பத்திகளை கொள்வனவு செய்வதில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கொள்வது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடைமுறைசார் விடயங்களை கண்கானிப்பதற்காக அவர்கள் வருகை தரவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிமால் ஹெட்டியாராய்சி தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பின் பின்னர் பெற்றுக் கொள்ளப்படும் அறிக்கையை ஐரோப்பிய சங்கத்திற்கு ஒப்படைக்கப்படும் என நிமால் ஹெட்டியாராய்சி குறிப்பிட்டுள்ளார் .

இந்த கலந்துரையாடல் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கடற்தொழில் அமைச்சின் செயலாளர் நிமால் ஹெட்டியாராய்சி சுட்டிக்காட்டியுள்ளார் .


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்