உலகின் விலைமதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் தோனி 9 ஆவது இடம்

உலகின் விலைமதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் தோனி 9 ஆவது இடம்

உலகின் விலைமதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் தோனி 9 ஆவது இடம்

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2015 | 4:28 pm

இந்திய அணியின் ஒருநாள் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி உலகின் சந்தை மதிப்பு மிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

லண்டன் ஸ்கூல் ஒப் மார்க்கெட்டிங் என்ற நிறுவனம் இந்தப் பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த பட்டியல் வீரர்களின் பெறுமதி, தற்பொழுது விளம்பர தூதராக செயற்படுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், மொத்த வருமானத்தில் இவற்றின் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளது.

இந்த பட்டியலில் மஹேந்திர சிங் தோனி, கால்பந்தில் சிறப்பாகச் செயற்படும் ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் டென்னிஸ் பிரபலங்களான மரியா ஷரபோவா, அண்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ் ஆகியோரை பின் தள்ளி 9ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளார். 20 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் சந்தை மதிப்பு அதிகமுள்ள விளையாட்டு வீரராக சுவிட்சர்லாந்து நாட்டின் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கோல்ப் வீரர்கள் டைகர் வுட்ஸ் 2 ஆவது இடத்தையும், பில் மிக்கெல்சன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முதல் 20 இடத்தைப் பிடித்த வீரர்கள்:

ரோஜர் பெடரர், டைகர் வுட்ஸ், பில் மைக்கெல்சன், லெப்ரான் ஜேம்ஸ், கேவின் டுரண்ட், ரோரி மெக்கில்ரோய், நோவக் ஜெகோவிச், ரஃபேல் நடால், மஹேந்திர சிங் தோனி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கொபே பிரையண்ட், மரியா ஷரபோவா, லயோனல் மெஸ்ஸி, உசைன் போல்ட், நெய்மர், அண்டி முர்ரே, கெய் நிஷிகோரி, டெர்ரிக் ரோஸ், ப்ளாய்ட் மேவெதர், செரீனா வில்லியம்ஸ்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்