உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 29 ஆம் திகதி முதல் தடை

உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 29 ஆம் திகதி முதல் தடை

உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 29 ஆம் திகதி முதல் தடை

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2015 | 10:19 am

2015 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள், செயலமர்வுகள் என்பன எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை இந்த தடை உத்தரவு காணப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளீயூ.எச்.எம்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய உயர்தர பரீட்சைக்கு சார்பான பயிற்சி புத்தகங்கள் விநியோகித்தல், சுவரொட்டிகளை காட்சிப்படுத்துதல், கையேடுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களினூடாகவும் உயர்தர பரீடசைக்கு சார்பான விடயங்களை வெளியிடுதலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த தடை உத்தரவை மீறும் நபர்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அண்மித்த பொலிஸ் தலைமையகம் அல்லது கல்விப் பணிமனைகளில் முறைப்பாடு செய்யுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் 011 2 78 42 08 அல்லது 011 2 78 45 37 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஏற்பாடு மற்றும் பெறுபேறுகள் வெளியீட்டு பிரிவிற்கு அறியப்படுத்த முடியும்.

இதனிடையே, 1911 என்ற இலக்கம் அல்லது 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புக்கும் அறியப்படுத்துமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்